1870 ஆம் ஆண்டளவில் கோப்பாய் வடக்கில் அம்பலம் வேலுப்பிள்ளை என்பவர் சிறந்த முருக பக்தராய் இருந்தார். பிரதி வருடமும் இந்தியாவிற்கு திருத்தல யாத்திரை செல்லும் போது திருச்செந்தூர் முருகனையும் தவறாது சென்று வணங்குவார். கந்தசஸ்டி விரதத்தை மிகவும் பக்தி பூர்வமாக அனுட்டித்து வந்தார். முருகப்பெருமானுக்கு தமக்கு உரியதான ஊரியாட்டி எனும் காணியில் ஓர் ஆலயமமைத்து வழிபாடு செய்யும் எண்ணங்கொண்டு. இந்தியாவில் ஓர் வேல் செய்வித்துக் கொண்டு வந்து அவ்வாறே செய்தார். அக்காலத்தில் கோப்பாய் வடக்கில் இராதம்பு எனும் குறிச்சியில் ( தற்போதும் இக்காணி அம்மா வளவு எனவே அழைக்கப்படுகிறது) வசித்த அவரது குருவான வேஹக்குட்டிக் குருக்கள் என்பவரது ஆலோசனையின் பெயரில் கோப்பாய் சந்திக்கு அருகாமையிலுள்ள அவருரிமையான உந்துவத்தை எனும் காணியில் தொடர்ந்து குறித்த வேலாயுதத்தை பிரதிஸ்டை செய்து வணங்கத் தீர்மானமானது. அம்பலம் வேலுப்பிள்ளையுடைய மைத்துனரான சுந்தர் சின்னத்தம்பி முதலானோருடைய உதவியும் பெற்று குறித்த உந்துவத்தை எனும் காணியில் கோயிலமைத்து உரிய வேலாயுதம் பிரதிஸ்டை செய்யப்பெற்று வழிபாடும் தொடர்ந்து நடந்து வந்தது. தேவக்குட்டிக் குருக்களே பூசாரியாயும் இருந்து வந்தார். 1895 ஆம் ஆண்டு மூலஸ்தானத்திலிருந்து அர்த்த மண்டபம் வரை வைரக்கல்லாலும் மிகுதி சாந்தினாலும் கட்டப்பட்டு 1897 இல் கும்பாவிசேகமும் நடந்தேறியது. தொடர்ந்து திருப்பணி வேலைகளும் நடந்து வந்தன. கோயிலமைக்கத் திருவுளம் கொண்ட ஊரியாட்டி எனும் காணியைக் கோயிலுக்கே தானசாதனமுஞ் செய்தார்.
குறித்த கோயிலையும் அதற்குரிய அசைவற்ற அசைவுள்ள சொத்துக்களையும், வேதசிவாகமப்படி கோயிலையும் பராபரித்து நல்ல நிலபரத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆலய மண்டபத்தில் கோப்பாய் வடக்கில் உள்ள சைவ சமையிகளை 1913 ஆம் ஆண்டு ஆனி மாதம் 20 ஆம் திகதி ஓர் மகா சபையாகக் கூட்டி ஆக வேண்டிய வேலைகளை யோசித்து மேற்ப்படி கோயிலைத் தக்கபடி பராபரித்து விருத்தி செய்யும் நோக்கமாக வடகோவைச் சித்திர வேலாயுத சுவாமி கோயில் தருமபரிபாலன சபை உதயமானது. குறித்த பரிபாலனசபைக்கு வடகோவையெங்கும் பரவலாக பின்வரும்
21 பெரும் நிர்வாக சபையினராகவும்.
1 . வேலு சின்னத்தம்பி
2 . வைரவி சின்னத்தம்பி
3 . வயிரமுத்து சின்னப்பா
4 . பூதத்தம்பி அப்பாத்துரை
5 . முருகர் பொன்னையா
6 . ஆறுமுகம் நாகமுத்து
7 . சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
8 . ஐயம்பிள்ளை முருகர்
9 .சின்னத்தம்பி மார்க்கண்டு
10 . முருகேசு வைரமுத்து
11 . கார்த்திகேசு சடையர்
12 . கார்த்திகேசு சுப்பிரமணியம்
13 . அம்பலவாணர் சின்னத்தம்பி
14 . வேலு சின்னத்தம்பி
15 . கணபதிப்பிள்ளை கந்தையா
16 . ஆறுமுகம் தில்லையம்பலம்
17 . கதிர்காமர் செல்லப்பா
18 . வேலு செல்லப்பா
19 . கணபதியார் சண்முகம்
20 . விசுவர் இளையதம்பி
21 . ஆறுமுகம் கார்த்திகேசு
குறித்த நிர்வாக சபையினர் கோயிலையும் அதற்க்குரியவைகளையும் பராபரிப்பதற்க்கு உதவியாக
1 . கந்தர் சின்னத்தம்பி
2 . வேலாயுதர் முருகேசு
3 . வீரகத்தியார் சதாசிவம்
4 . அம்பலம் வேலுப்பிள்ளை
5 . அப்பாக்குட்டி காசிலிங்கம்
எனும் ஐவரையும் பஞ்சகர்த்தாக்களாகவும் மேற்ப்படி திகதியிலேயே நியமனமாக்கினர்.
குறித்த பஞ்சகர்த்தாக்கள் கோப்பாய் வடக்கு கந்தர் வினாசித்தம்பி என்பவரை மனேசராக அவர் சம்மதத்துடன் தீர்மானித்து அவரது கடமைகளையும் வரையறை செய்து நியமித்தனர்.
இதற்க்கு அத்தாட்சியாக 1913 ஆம் வருடம் ஐப்பசி மாதம் 16 ஆந் திகதி இலக்கம் 173 பிரசித்தி பெற்ற நொந்தாரிசு சி. கெங்காதரையர் முன்னிலையில் பஞ்சகர்த்தாக்களும் மனேசர்களும்,
க. இளையதம்பி
சு. சிவகடாட்சக்குருக்கள்
வே. சின்னத்தம்பி
வே. பரமசாமிக்குருக்கள்
சாட்சிகளும் ஒப்பமிடப்பட்டு ஓர் தருமசாதன உறுதி முடிக்கப்பட்டது.
1916 ஆம் ஆண்டளவில் கோபுர வேலைகளும் தொடர்ந்து கொட்டகை வேலைகளும் நடைபெற்று நித்திய நைமித்திக பூசைகளும் ஒழுங்காக நடைபெறத் தொடங்கின.
1925 இல் இராமு சின்னத்தம்பி என்பவரின் நேர்த்திக்கடனுக்காக வள்ளி தெய்வானை சமேதரரான ஆறுமுகப்பெருமான் திருவுருவம் செய்யப்பெற்று பிரதிஸ்டை செய்யப்பட்டது. பிரதி வருடமும் ஆறுமுகப்பெருமான் பிரதிஸ்டை செய்த நாளில் விழா செய்வதற்காக தமது பத்தக்கச்சி எனும் காணியில் ஒரு பகுதியையும் தரும நன்கொடையாக எழுதி வைத்தார். இந்தக் காலத்தில் வேதக்குட்டிக்குருக்களின் மகன் சபாரத்தினக் குருக்கள் பூசாரியாக இருந்தார். அவர் ஓர் பூரண பொலிவுள்ள பக்தி பூர்வமான குருக்களாக செயலாரியதனையும் வழிபடுவோர் அவர் கையால் திருநீறிட்டால் சுகம் வரும் என்ற பூரண நம்பிக்கையோடு செயவித்ததனையும் அக் காலத்தில் அவதானிக்க முடிந்தது.
வரலாறு முற்றுப் பெறவில்லை....







